உக்ரைனுக்கு ஆதரவாக போரில் பங்கேற்ற பிரேசில் அழகி பலி

உலகச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

உக்ரைன்,ஜுலை 7

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக பிரேசில் நாட்டை சேர்ந்த மாடல் அழகி தலிதா டோவாலே போரில் பங்கேற்றார்.

துப்பாக்கி சுடுதலில் பயிற்சி பெற்ற அவர் கார்கிவ் நகரில் பதுங்கு குழியில் இருந்தபோது ரஷிய படைகள் ஏவுகணையை வீசி தாக்கியது. இதில் தலிதா டோவாலே பலியானார்.

இவர் ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிக்கு எதிராக போரில் பங்கேற்று அதை தனது யூடியூப் சேனலில் வெளியிட்டார். தற்போது உக்ரைன் மீதான போர் தொடர்பாக வீடியோ வெளியிட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Posts