முன்னாள் நிதியமைச்சர்களின் சந்திப்பு

செய்திகள்

முன்னாள் நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று ஐ.தே.கவின் முன்னாள் நிதி அமைச்சரான ரொனி த மெல்லைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ரொனி த மெல்லின் கொழும்பில் அமைந்துள்ள இல்லத்தில் அவரை சந்தித்து, தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் இதர விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையொன்று முன்வைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பதவி விலகியிருந்தார்.

அவர் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் அவை நிறைவடையும் வரை தாம் இவ்வாறு பதவி விலகுவதாக முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.