நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை

செய்திகள்

நாட்டின் பல பாகங்களில் இன்றும் மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இடைக்கிடையே மழைபெய்யும் எனவும், வடமத்திய மற்றும் யாழ். மாவட்டத்தில் கூடுதலான மழையினை எதிர்பார்க்க முடியுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு ஆகிய மாகாணங்களில் இன்று பிற்பகல் காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும், மின்னல் மற்றும் காற்றுடனான மழைபெய்யும் சந்தர்ப்பங்களில் அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.