தேங்காயில் தோன்றிய அம்மனின் கண்கள்

செய்திகள்

நயினாதீவு, நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயில் அம்மனின் கண்கள் இரண்டும் தெரியும் படியாகவுள்ளது.

குறித்த அதிசயம் கிளிநொச்சி, மருதநகரிலுள்ள சின்னப்பு, பொன்னம்மா என்பவரின் வீட்டில் நிகழ்ந்துள்ளது. நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் அர்ச்சனை செய்த தேங்காயை வீட்டில் சுவாமி அறையில் எடுத்து வைத்த போது உடைத்த தேங்காயில் அம்மனின் கண்கள் இருப்பதைக் கண்டு வியப்படைந்துள்ளனர்.

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் வழியில் மருதநகர் பிள்ளையார் கோவில் முன்பாகவுள்ள வீதிக்கு அருகிலேயே சின்னப்பு, பொன்னம்மாவின் வீடு உள்ளமை குறிப்பிடத்தக்கது.