விஜயதாஸ ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதியின் பதில்

முக்கிய செய்திகள் 1

விஜயதாஸ ராஜபக்ஷ, அமைச்சரவையில் வகிக்கும் அமைச்சுப் பதவி உள்ளிட்ட அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு கோரி ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்த கடிதத்துக்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

அதன்படி விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் ஜனாதிபதி செயலகத்தினால் நீதி மற்றும் புத்த சாசன அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் கயந்த கருணாதிலக தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில், விஜயதாஸ ராஜபக்ஷ அமைச்சரவை தீர்மானங்களுக்கு எதிராக, அரசின் கொள்கைகளை விமர்சித்துக் கொண்டிருப்பதன் காரணமாக அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவின் அமைச்சரவை அதிகாரங்களை விலக்கிக் கொள்ளுமாறு ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் நேற்று கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது.