சமுர்த்தித் திட்டம் செழுமைப்படுத்தி முன்னெடுக்கப்படுகிறது – ஜனாதிபதி

முக்கிய செய்திகள் 1

சமுர்த்தித் திட்டத்தை மிகவும் பலமிக்கதாக்கி முன்னெடுத்துச் செல்வதற்கன பொறுப்பை குறையின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் சமுர்த்தி திட்டத்தை கட்டியெழுப்புவதற்காக சிறந்த பங்களிப்பு வழங்கியிருப்பதாக நேற்றைய தினம் தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற “சமுர்த்தி சமூகம் 2017” தேசிய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி திட்டம் வெற்றியளிக்காத வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதனை வெற்றித் திட்டமாக மாற்றுவதற்கு துறைசார்ந்த அனைவரினதும் அறிவு, அனுபவம் மற்றும் பங்களிப்பை எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.