அரிசி இறக்குமதிக்குத் தீர்மானம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

இந்தியாவிலிருந்து 70 ஆயிரம் மெற்றிக்தொன் அரிசி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

சம்பா மற்றும் நாட்டரிசி என்பன இவ்வாறு இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும், இது தொடர்பில் இந்திய தனியார் நிறுவனம் ஒன்றுடன் அரசாங்கம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகவும், இலங்கையில் அரிசி தட்டுப்பாட்டினை நிவர்த்தி செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.