சைட்டம் எதிர்ப்பு நடவடிக்கை

செய்திகள் முக்கிய செய்திகள் 1

பிரதான நகரங்களை முன்னிலைப்படுத்தி, இன்று இரவு சைட்டம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அச்சங்கத்தின் ஊடகக் குழு உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே இதனைத் தெரிவித்துள்ளதுடன், இதில், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.