இரண்டு நாட்களுக்கு நாட்டில் மழை

செய்திகள்

நாளை தொடக்கம் இரண்டு நாட்களுக்கு வடக்கு, வடமத்தி, கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் மழை வீழ்ச்சியில் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

குறித்த பகுதிகளில் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும், இன்று பிற்பகல் தொடக்கம் நாட்டின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.