கொழும்பு–பதுளை நகரங்களுக்கு இடையில் சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு,ஓக 13

கொழும்பு மற்றும் பதுளை ஆகிய நகரங்களுக்கு இடையில் இன்று முதல் புதிய சொகுசு ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவின் அறிவுறுத்தலுக்கு அமைய மலையகத்தின் சுற்றுலாத் தளங்களை இணைக்கும் வகையில் குறித்த ரயில் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எல்ல ஒடிஸ்ஸி (Ella Odessy) என பெயரிடப்பட்டுள்ள குறித்த ரயில் சேவை பிரதி சனிக்கிழமைககளில் காலை 05.30 க்கு கொழும்பு கோட்டையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து மாலை 03.55 க்கு பதுளை ரயில் நிலையத்தை சென்றடையவுள்ளது.

அத்துடன் குறித்த ரயில் சேவை பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் பதுளையில் இருந்து காலை 09.50 க்கு பயணத்தை ஆரம்பிக்கவுள்ளதுடன் இரவு 07.20 க்கு கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது.