மனைவியைக் குத்தி கொன்ற தந்தை தற்கொலைக்கு முயற்சி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

மதவாச்சி,ஓக 17

மதவாச்சி, மஹதிவுல்வெவ பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மகளின் பாடசாலைக்கு முன்பாக தந்தையினால் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மனைவியை கொலை செய்தார் எனக் கூறப்படும் நபர் பின்னர் கிருமி நாசினியை உட்கொண்டதில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் 3 கூரிய ஆயுதங்களும் சந்தேகநபரிடம் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.