கொரோனா தொற்று உறுதியான மேலும் 166 பேர் அடையாளம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,ஓக 18

கொரோனா தொற்று உறுதியான மேலும் 166 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 668,663ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றால் மேலும் 5 பேர் மரணித்தனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

60 வயதிற்கு மேற்பட்ட நால்வரும், 30 முதல் 59 இடைப்பட்ட ஒருவரும் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்ததாக அரசாங்கத் தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.