ஹோட்டன் சமவெளியில் சிறுத்தைகள்: பீதி வேண்டாம் என்று அறிவிப்பு

செய்திகள் முக்கிய செய்திகள் 3

ஹோட்டன்,ஓக 19

முடிவு (ஹோட்டன்  சமவெளியில்) இரண்டு இளம் சிறுத்தைகள் சுற்றித் திரிவதை புகைப்படம் எடுத்துள்ள சிலர் அதனை சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளனர்.

இந்த புகைப்படங்கள் தற்போது அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் சிறுத்தைகளின் நடத்தை  ஹோர்டன் சமவெளிக்கு வருபவர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக பலரும் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

எனினும், மக்கள் கால் நடையாக பயணிக்க தடைசெய்யப்பட்ட இடத்தில், இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக  வனஜீவராசிகள் பணிப்பாளர் நாயகம் சந்தன சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த சிறுத்தைகளால் பயணிகளுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுத்தைகளின் இனச்சேர்க்கை காலத்தில் இதுபோன்ற நடமாட்டங்கள் சாதாரணமானது என்றும், ஆகவே பொதுமக்கள் பீதி அடைய எந்த காரணமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.