நியூயார்க்கில் காந்தி சிலை சேதம்: இந்திய தூதரகம் கண்டனம்

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

நியூயார்க்,ஓக 19

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்து கோயில் முன்பு இருந்த மகாத்மா காந்தி சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர்.

இது குறித்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனை வெறுப்பை ஏற்படுத்தும் குற்றமாக கருதி நியூயார்க் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காந்தி சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, இந்திய தூதரக அதிகாரிகள் கூறுகையில், சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதால் அமெரிக்க அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம் என தெரிவித்தனர்.