மருந்து தட்டுப்பாட்டுக்கு சுகாதார அமைப்பே பொறுப்பேற்ற வேண்டும்: GMOA

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு,செப் 13

நாட்டில் நிலவும் மருந்து தட்டுப்பாட்டிற்கு மருத்துவமனை சுகாதார அமைப்பு, சுகாதார அமைச்சு, மத்திய மருத்துவ நிறுவகம் ,அரச மருத்துவக் கழகம் (SPC), அரச மருந்து உற்பத்திக் கழகம் (SPMC), தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் (NMRA) ஆகியவை பொறுப்பேற்க வேண்டும். அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.

மேற்கண்ட நிறுவனங்களுக்கிடையில் ஒருங்கிணைப்பு இல்லை எனவும், அவற்றின் வினைத்திறன் இன்மையே நாட்டில் மருந்து தட்டுப்பாட்டுக்கு முக்கிய காரணம் என GMOA ஊடகப் பேச்சாளர் சமில் விஜேசிங்க தெரிவித்தார்.

மருந்துகளை இறக்குமதி செய்வதில் உள்ள பிரச்சினைகளால் நாடு பாரிய டொலர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் உள்ளுர் மருந்து உற்பத்தியின் திறன் அதிகரிக்கப்பட வேண்டும்.

மருந்து விநியோகம் தொடர்பான நிறுவனங்களின் வினைத்திறன் இன்மையே நாட்டில் மருந்துப் பற்றாக்குறைக்குக் காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் மருந்துகளை வழங்குவதற்கான முறையான பொறிமுறையை அமைக்க வேண்டும் என சங்கம் தெரிவித்துள்ளது.

Trending Posts