வித்தியா கொலை வழக்கு: குற்றவாளிகளுக்கு மரண தண்டனை

புங்குடுதீவு மாணவி வித்தியா சிவலோகநாதன் கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில், ஏழு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால் ட்ரயல் அட் பார் மன்று அவர்களுக்கு மரண தண்டனைத் தீர்ப்பளித்தது.

மரண தண்டனையோடு, 30 ஆண்டுகளுக்குச் சிறைத் தண்டனையும், 40,000 ரூபா தண்டப் பணமும், வித்தியாவின் குடும்பத்துக்கு ஒரு மில்லியன் ரூபா நஷ்டஈடும் வழங்கப்பட வேண்டுமென அமர்வு உத்தரவிட்டது.

இதில், 2ஆம், 3ஆம், 5ஆம், 6ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன் ஆகியோர் கூட்டு வன்புணர்வு, கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டுள்ளனர்.

2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றமொன்றை மேற்கொள்வதற்கான சதி மேற்கொண்ட குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இவர்களுக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு