17 இலட்சம் பேர் பாதிப்பு

நாடளாவிய ரீதியில் நிலவும் வரட்சி காரணமாக 17 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

17 மாவட்டங்கள் வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் குருநாகல், புத்தளம், திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் வரட்சியினால் 1,78,800 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தின் குச்சவெளி, கிண்ணியா, வெருகல், தம்பலகாமம், கந்தளாய், மூதூர், கோமரன்கடவல, சேருவில, மொரவெவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இடர் முகாமைத்துவ நிலையத்தின் புள்ளிவிபரங்களுக்கு அமைய, கிளிநொச்சி மாவட்டத்தில் 92,847 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி மற்றும் பச்சிளைப்பள்ளி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு