தமது நகைகள் இன்னும் ஒப்படைக்கவில்லை – மக்கள் ஆதங்கம்

யுத்த காலத்தில் தாம் ஒப்படைத்த தங்க நகைகள் தமக்கு இதுவரை கிடைக்கவில்லையென வடக்குக் கிழக்கு மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதிக பெறுமதியுடைய தங்க நகைகளுக்கு என்ன நடந்ததென மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் வங்கியில் வைப்பிலிடப்பட்டிருந்த தங்க நகைகளை அரசாங்கம் பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் 2014ஆம் ஆண்டு டிசம்பர் 4ஆம் திகதி கடந்த அரசாங்கம் 2,379 பேருக்கு அவர்களின் தங்க நகைகளை மீளக்கையளித்திருந்த போதிலும், அதிகப் பெறுமதியுடைய, அதிக எடை கொண்ட தங்க நகைகளைத் தாம் ஒப்படைத்த நிலையில், சொற்ப அளவு நகையே தமக்கு கிடைத்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தங்க நகைகளைத் தாம் ஒப்படைத்தமைக்கான பற்றுச்சீட்டுகளும் தம்மிடம் காணப்படுவதாக மக்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, யுத்த காலத்தில் மீட்கப்பட்ட தங்கம் தொடர்பில் தொடர்ந்தும் தகவல்களைத் திரட்ட வேண்டியுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா, அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி, தமிழ் மக்களின் நகைகளில் ஒரு தொகுதி விடுவிக்கப்பட்டு, மக்களிடம் கையளிக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஆனால், தற்போதைய நல்லாட்சியின் தூண்கள் எனக் கூறுபவர்கள், அரசாங்கத்திடம் உள்ள தமிழ் மக்களின் நகைகளைப் பெற்றுக் கொடுக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காதிருப்பது அனைவர் மத்தியிலும் விசனத்தையே ஏற்படுத்தியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு