வித்தியா கொலை வழக்குத் தீர்ப்புக்கு மலையக மக்கள் பாராட்டு

படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியா வழக்கு தொடர்பில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு மலையக மக்கள் நீதிக்கு தலைவணங்கி பாராட்டியுள்ளனர்.

கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் கூட்டு வன்கொடுமையின் பின் மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏழு பேருக்கு இன்று மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட் பார் தீர்ப்பாயம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

பல வருட காலமாக இந்த வழக்கின் தீர்ப்பு எப்போது வருமென எதிர்பார்த்திருந்த மலையக மக்கள் இன்று காலை முதல் ஊடகங்களின் ஊடாக வெளியான செய்தியை கேட்டு எந்த நேரத்தில் இவர்களுக்கு தீர்ப்பு வழங்கப்படுமென எதிர்பார்த்த வண்ணம் இருந்த நிலையில், இன்று மதியம் மரண தண்டனை கிடைத்த செய்தியை கேட்டு பூரிப்படைந்த மலையக மக்கள் இந்த நாட்டில் இவ்வாறான இழிவான செயலில் ஈடுபட எண்ணும் நபர்களுக்கு ஒரு பாடமாக அமைந்து விட்டதாக இந்த தீர்ப்பை தந்த நீதிபதிகளுக்கு சிரம் சாய்த்து நன்றி தெரிவிப்பதாகவும் மலையக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நாட்டிலுள்ள அனைத்து மாகாணங்களிலும் வாழ்கின்ற சிறுவர்கள் எதிர்காலத்தில் சுதந்திரமாக அச்சமின்றி அவர்களின் பயணத்தைத் தொடர இந்த தீர்ப்பு ஒரு பாடமாக அமைந்திருப்பதாக மலையக மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு