நீதியமைச்சர் முன்வைத்த திருத்தச் சட்டமூலத்தை சபையில் சமர்ப்பிக்க அனுமதி

நீதியமைச்சர் தலதா அதுகோரல முன்வைத்த தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கான திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக 2013ஆம் ஆண்டு 2ஆம் இலக்க குற்றவியல் தண்டனை சட்டக்கோவை (விஷேட விதப்புரைகள்) திருத்தம் செய்வதற்கான திருத்தச் சட்டமூலத்தை, நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு முன்னர், அதனுடன் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசிக்கப்பட்டதுடன், அவர்களும் குறித்த சட்டமூலத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், ஆரம்பத்தில் 04 வருடங்களுக்கு அமுலாகும் வகையில், குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும், அமைச்சர் தலதா அதுகோரல முன்வைத்த யோசனைக்கு, அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு