வாக்காளர் பட்டியலை உறுதிப்படுத்தும் பணி அடுத்தவாரம்

2017ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர் பட்டியலை உறுதிப்படுத்தும் நடவடிக்கை அடுத்த வாரங்களில் இடம்பெறவுள்ளது.

வாக்காளர் பெயர் பட்டியலை தயார் செய்யும் இறுதி நடவடிக்கைள் தற்போது நடந்து கொண்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளதுடன், 2017ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலுக்கான மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புக்கள தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த மாத இறுதிப் பகுதியில் வாக்காளர் பெயர்ப் பட்டியலை உறுதிப்படுத்த திட்டமிட்டிருந்த போதிலும், அதற்கு மேலதிகமாக இன்னொரு வாரகாலம் தேவைப்படும் என்றும் வாக்காளர் பெயர்ப் பட்டியலை உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அறிவிக்கப்படும் எந்தவொரு தேர்தலுக்கும் 2017ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலை பயன்படுத்துவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு