குடும்ப வன்முறையா?: விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு, செப் 17

குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கான உதவிச் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் திருமதி கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

மேலும் மாவட்ட அளவில் பெண்கள் தடுப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குடும்ப வன்முறை தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக 1938 என்ற தொலைபேசி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அது 24 மணி நேரமும் செயற்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்