சர்வதேச தரத்தில் மனித உரிமைகள் பேணப்படும் – அரசாங்கம்

இலங்கையின் மனித உரிமை நிலைமைகளை சர்வதேச தரத்துக்கு பேணுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியத்திடம் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான குழு ஒன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையாளர் க்றிஸ்தோபர் ஸ்டைலியானைட்ஸை சந்தித்திருந்த போது, அமைச்சர் திலக் மாரப்பன இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் இரண்டு பிரதான கட்சிகள் ஒன்றிணைந்து, புதிய அரசாங்கத்தை ஏற்படுத்தியதன் பின்னர், மனித உரிமைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை சர்வதேசத் தரத்திற்கு முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருவதுடன், ஜெனீவா பிரேரணையை முழுமையாக அமுலாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், இதற்கான பொறிமுறைகள் ஒவ்வொன்றாக அமுலாக்கப்படும் என்பதுடன், இதற்கு நீண்டகால அவகாசம் தேவைப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு