ஜப்பான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழ் சபை கலைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் சின்சோ அபே அறிவித்துள்ளார்.

ஜப்பானிய நாடாளுமன்றத்திற்கு ஒரு வருடகால அவகாசம் இருக்கின்ற போதும், கடந்த திங்கட்கிழமை தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டமைக்கு அமைவாக, இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

வடகொரியாவினால் ஏற்பட்டுள்ள அணுவாயுத அச்சுறுத்தல்களை சமாளிப்பதற்கு சக்தி வாய்ந்த அரசாங்கம் ஒன்று அவசியம் என்ற நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படுவதாக சின்சோ அபே தெரிவித்துள்ளார்.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி அங்கு பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு