தோல்விகளை சாதகமாக பயன்படுத்தியமையே வெற்றிக்கு வழிவகுத்தது: ஜனாதிபதி

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

கொழும்பு,செப் 18

கிரிக்கட் அணித் தலைவர் தசுன் ஷனக்க மற்றும் அணியினர் தமது தோல்விகளைப் பயன்படுத்திக் கொண்டு ஆசிய கிண்ணத்திற்கு முன்னேறுவதற்கு தங்களை பலப்படுத்திக் கொண்டதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அணியினர் தொடர்ந்தும் இதேபோன்று சிந்தித்தால் நாட்டை வெற்றியை நோக்கி இட்டுச் செல்வது கடினமல்ல.

குழுவாக இணைந்து செயற்பட்டமை வெற்றிக்கு உதவியதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆசிய மட்டத்திலான வெற்றிகளைப் பெற்ற இலங்கை விளையாட்டு வீரர்கள் மற்றும் ஆசிய வலைப்பந்தாட்ட கிண்ணத்தை வென்ற அணியினரை பாராட்டும் நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.