50 மில்லியன் கடன் வழங்க அனுமதி

இலங்கைக்கு 50 மில்லியன் டொலர்கள் கடனை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் சபை அனுமதி வழங்கியுள்ளது.

கட்டிடங்களின் கூரைகளில் சூரிய ஒளியில் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ளும் கருவிகளை பொருத்துவதற்கான வேலைத்திட்டத்துக்காக இந்த கடன் வழங்கப்படவுள்ளதாகவும், இலங்கையில் கடந்த இரண்டரை தசாப்தங்களாக அனைத்து தரப்பினருக்கும் மின்சாரத்தை வழங்கும் வகையில் மின்சாரத்துறை அபிவிருத்தி கண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது இலங்கை இயற்கை மற்றும் மீள்சுழற்சிகளின் மூலம் மின்சாரத்தைப் பெற்றுக் கொள்வது குறித்து அவதானம் செலுத்த வேண்டியிருப்பதாக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் சக்திவள நிபுணர் முக்தார் கமுதானோவ் தெரிவித்துள்ளதுடன், இதன்படியே இந்த கடனை வழங்க தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு