யாழில் ஹர்த்தாலுக்கு அழைப்பு: வித்தியாவுக்காக மீண்டுமொரு போராட்டம்?

யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பாக எதிர்வரும் சனிக்கிழமை பூரண ஹர்த்தாலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தீவக மக்களும் யாழ்ப்பாணம் பெண்கள் அமைப்புகளும் இணைந்தே இந்த ஹர்த்தாலுக்கான அழைப்பினை விடுத்துள்ளனர். இது தொடர்பான சுவரொட்டிகள் யாழ். நகரின் மக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான ஸ்ரான்லி வீதி, கே.கே.எஸ் வீதி, பலாலி வீதி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ளன.

குற்றவாளிகள் தப்பிக்க உதவியவர்களும் குற்றவாளிகளே, இவர்களும் தண்டிக்கப்பட வேண்டும், வித்தியாவுக்கு முழுமையான நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே குறித்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு