இராணுவத்தினர் சர்வதேச நீதிமன்றிற்குச் செல்வதை அனுமதிக்க முடியாது

இராணுவத்தில் இருக்கின்ற சில குற்றவாளிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கூறினால், முழு இராணுவ வீரர்களையும் குற்றவாளிகளாக சித்தரிக்க கூட்டு எதிர்க்கட்சி முயற்சிப்பதாக பீல்ட் மாசல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், அதேநேரம் எந்தவொரு இராணுவ அதிகாரியும் சர்வதேச யுத்த நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்படுவதை தான் எதிர்க்கின்ற போதிலும், குற்றமிழைத்தவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டமுறைப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடும் புத்த பிக்குகள் தொடர்பில் விமர்சிக்கப்படுவது தவிர்க்க முடியாதது என்றும் பீல்ட் மாசல் அமைச்சர் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு