மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் விவகாரம்; நிர்ணயிப்புக் குழு நியமிப்பு

மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையில், மாகாண ரீதியான புதிய தொகுதிகளை நிர்ணயிப்பதற்கான குழு ஒன்று எதிர்வரும் திங்கட்கிழமை நியமிக்கப்படவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

ஐந்து பேர் கொண்ட இந்த குழுவிற்கான உறுப்பினர்களை ஜனாதிபதி பெயரிடுவதுடன், ஏற்கனவே தேசிய எல்லை மீள்நிர்ணயக் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கும் 03 பேர் இந்த விஷேட குழுவிற்கு உள்வாங்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

புதிய மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டத்தின்படி, தொகுதிவாரி மற்றும் விகிதாசார முறைமைகளின் கீழ் 50க்கு50 என்ற விகிதத்தில் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு