பிரதான அங்காடிகள் அடங்கிய பிரதேசங்களாக மாறவுள்ள கோட்டை, காலிமுகப் பகுதிகள்

கொழும்பு கோட்டை மற்றும் காலிமுக பகுதிகளை பிரதான அங்காடிகள் அடங்கிய பிரதேசங்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்த்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் பொருட்கொள்வனவுக்கான பிரதான தளமாக இலங்கையை உருவாக்குவதற்கான முதல் முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன் அடிப்படையிலேயே கொழும்பு கோட்டை மற்றும் காலி முகப் பகுதிகளின் அபிவிருத்தி செயற்பாடுகள் இடம்பெறுவதாக அமைச்சர் ஜோன் அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு