முன்னறிவிப்பின்றி போராட்டத்திற்குத் தயாராகும் மருத்துவ அதிகாரிகள் சங்கம்

மாலபே தனியார் மருத்துவக் கல்லூரி பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுப்பதில் மேலும் காலம் தாழ்த்தப்பட்டால் முன்கூட்டிய அறிவிப்பின்றி தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சங்கத்தின் செயலாளர் மருத்துவர் ஹிரித அளுத்கே இதனை தெரிவித்துள்ளதுடன், நேற்று இடம்பெற்ற மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு