ஆரையம்பதியில் சடலம் மீட்பு

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதியிலுள்ள வீடொன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி 01 ஆம் வட்டாரம் பி.எஸ் வீதியிலுள்ள வீடொன்றிலிருந்தே இந்த சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்ததுடன், மீட்கப்பட்ட சடலம் குறித்த வீட்டில் இருந்த மா.ரகுவரன் (34 வயது) என்பவருடையதென அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ள நிலையில் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதை அவதானித்த பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் வீட்டில் அழுகிய நிலையில் சடலத்தினை மீட்டுள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு