1,158 மரண தண்டனைக் கைதிகள்

மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,158 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதில், 826 பேர், தங்களுடைய தண்டனைக்கு எதிராக, மேன்முறையீடு செய்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்கள பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளதுடன், பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய 20,400 பேர், நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மரண தண்டனை கைதிகள், சிறைச்சாலைகளில், அதியுயர் பாதுகாப்பு வலயத்துக்குள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அதேவேளை, புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, யாழ். மேல் நீதிமன்றத்தினால் கடந்த 27ஆம் திகதி மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்ட ஏழு பேரும் இதில் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு