ஆளுனரின் அதிகாரத்தின் கீழ் கிழக்கு மாகாண சபை நிர்வாகம்

கிழக்கு மாகாண சபையின் ஆட்சிக்காலம் சனிக்கிழமை (30) நள்ளிரவு 12.00 மணியுடன் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த பொகொல்லாகமவின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சபை கலைவதையிட்டு, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி, ஓட்டமாவடி, ஏறாவூர் போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் சிலர் பட்டாசுகளை கொளுத்தி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மாகாண சபை உறுப்பினர்களுக்கு, எதிராகவே இவ்வாறு பட்டாசுகளை கொளுத்துவதாகவும் கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டு, அதன் அதிகாரம் ஆளுநரிடத்தில் ஒப்படைக்கப்பட்டமை தமக்கு மகிழ்ச்சியை தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண சபை, 37 உறுப்பினர்களைக் கொண்டது. இதில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 14 உறுப்பினர்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 உறுப்பினர்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 07 உறுப்பினர்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 04 உறுப்பினர்களையும், தேசிய சுதந்திர முன்னணி ஓர் உறுப்பினரையும் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு