எரிபொருள் நிரப்பும் நிலையங்களின் கட்டுப்பாட்டினை தனியாருக்கு வழங்க திட்டம்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கொழும்பு,செப் 22

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 1250 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியின் கட்டுப்பாட்டை எதிர்வரும் நவம்பர் மாதம் தனியார் நிறுவனங்களுக்கு வழங்கவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அதன்படி, அந்த நிறுவனங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், எரிபொருளை விநியோகிப்பதற்கும், எரிபொருளை விற்பனை செய்வதற்கும் அதிகாரம் வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் காஞ்சன விஜேசேகர, டெண்டர்களை சமர்ப்பித்துள்ள 24 நிறுவனங்களில் சில நிறுவனங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒரு பகுதியை ஏனைய தனியார் விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை மீளாய்வு செய்யும் கூட்டத்தில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.