நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு ஆதரவு வழங்கத் தயார்: அவுஸ்ரேலியா

செய்திகள் முக்கிய செய்திகள் 3

கொழும்பு,செப் 22

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்குத் தேவையான ஆதரவை வழங்கத் தயாராக இருப்பதாக அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீவன்ஸ் தெரிவித்துள்ளார்.

அஸ்கிரிய பீடாதிபதிகளை இன்று (வியாழக்கிழமை) காலை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜெனீவா சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரிக்கும்அரசியல் விவகாரங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் விக்டோரியா நுலாந்திற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் மேம்படுத்துவது குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.