உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவையை தெளிவுப்படுத்தவில்லை: சபாநாயகர்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, செப் 22

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்தப்பட்டுள்ள பணிக்குழாம் மட்ட உடன்படிக்கை தொடர்பில் அமைச்சரவையை தெளிவுப்படுத்தவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது சபாநாயர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் பணிக்குழாம் மட்ட உடன்படிக்கைக்கு அந்த நிறைவேற்றுக்குழுவின் அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

எதிர்காலத்தில் அந்த அனுமதி கிடைக்கப்பெற்றவுடன் ஒப்பந்தம் தொடர்பில் அமைச்சரவையை தெளிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.