வட-கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை: விஜேதாச

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,செப் 22

வடக்கு – கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உத்தேசித்துள்ளதாக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது, போர்க்குற்றம் தொடர்பில் வெளியக விசாரணைகள் இலங்கையின் அரசியலமைப்புக்கு முரணானவை என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் இன்று நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கேள்வி எழுப்பப்பட்டது.

”கடந்த 2015 செப்டம்பரில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவின் அனுசரணையில் அதாவது அவரது இணக்கத்துடன், 33/1 என்ற தீர்மானம் முன்வைக்கப்பட்டது.

அதில், சர்வதேச நாடுகளில் நீதிபதிகளால் விசாரிக்கப்படவேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

எனினும், பின்னர் இலங்கையின் கோரிக்கைக்கு அமைய அது பொதுநலவாய நாடுகள் மற்றும் ஏனைய நாடுகளின் நீதிபதிகள் என்றவாறு மாற்றப்பட்டிருந்தது.

எனினும், இந்த முறை வெளிவிவகார அமைச்சருடன் அப்போதைய மற்றும் தற்போதைய நீதியமைச்சராக விஜேதாச ராஜபக்ஷவும் ஜெனீவா சென்றிருந்த நிலையில், அரசாங்கத்தின் நிலைப்பாடு அமர்வின்போது தெரிவிக்கப்பட்டது.