அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர தலைமையில் உயர்மட்ட கலந்துரையாடல்

செய்திகள் முக்கிய செய்திகள் 2

கொழும்பு, செப். 22: வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுள், விவசாயம், நீரியல் உயிரின வளர்ப்பு உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பிரதேச மக்களிடம் கையளிப்பது தொடர்பாக ஆராய்வதற்கான துறைசார் அமைச்சர்கள் உள்ளிட்ட உயர்மட்டக் கலந்துரையாடல், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய, வனப் பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சில் இன்று இடம்பெற்றது.

துறைசார் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா, மஹிந்த அமரவீர ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், துறைசார் அமைச்சுக்களின் அதிகாரிகளும், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர், மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களின் அதிகாரிகள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமான காதர் மஸ்தான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில், பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டடன.

வனப் பாதுகாப்பு, வன ஜீவராசிகள் திணைக்களங்களினால் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களுள், விவசாயம் மற்றும் நீர்வேளாண்மை எனப்படும் நீரியல் உயிரின வளர்ப்பு உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பொருத்தமான இடங்களை விடுவித்து, உற்பத்திகளை மேற்கொள்ளும் வகையில் பிரதேச மக்களிடம் கையளிப்பதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.