கணவருக்கு 2-வது திருமணம் செய்து வைத்த முதல் மனைவி

இந்தியச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள் 3

திருப்பதி, செப்22

திருப்பதி மாவட்டம் டக்கிலி அம்பேத்கர் நகரைச் சேர்ந்த கல்யாண் டிக் டாக்கில் பிரபலமானவர். இவர் அடிக்கடி வீடியோக்கள் எடுத்து டிக்டாக் மற்றும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இவருக்கும் கடப்பாவை சேர்ந்த விமலா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் வீடியோக்கள் எடுப்பது மூலம் தொடர்பு ஏற்பட்டது.

அந்த தொடர்பு காதலாக மாறி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவருமே டிக்டாக் வீடியோக்கள் உருவாக்கி வெளியிடுகின்றனர். இருவருக்கும் டிக் டாக்கில் பின்தொடர்பவர்கள் அதிகம் உள்ளனர். இருவரும் இணைந்து வீடியோக்களை உருவாக்கி அதிக பிரபலம் அடைந்தனர். சில மாதங்களாக விமலா சோகமாக இருந்து உள்ளார்.

ஏன் என்று விமலாவிடம் பலமுறை கல்யாண் கேட்டு உள்ளார். அப்போது தான் விசாகபட்டனத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவர் தன்னை சந்தித்தகாக் கூறினார். கல்யாண் திருமந்த்திற்கு முன் விசாகபட்டினத்தை சேர்ந்த நித்யாஸ்ரீ என்பவருடன் சேர்ந்து டிக் டாக் வீடியோ உருவாக்கி வந்துள்ளார்.

அப்போது இருவரும் காதலித்து உள்ளனர். சில காலம் நன்றாக இருந்த காதல் சில காரணங்களால் முறிந்தது. தொலைபேசி தொடர்பும் துண்டிக்கப்பட்டது. கல்யாண் கடைசியில் அவரை மறந்து விமலாவை மணந்து உள்ளார்.

திடீரென்று இப்போது நித்யாஸ்ரீ இவர்கள் வாழ்க்கைக்குள் நுழைந்து உள்ளார். நேரடியாக விமலாவிடம் சென்று விவரத்தை கூறி உள்ளார். சொன்னாள். கடந்த காலத்தில் இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததாகவும், அவரை விட்டு பிரிந்து செல்ல முடியவில்லை என்றும் கதறி அழுதாள். எப்படியும் எங்களை ஒன்று சேர்த்து வைத்து என்று கெஞ்சினாள்.

எந்த மனைவியும் செய்யாத ஒரு தியாகத்தை செய்ய விமலா தயாராகிவிட்டார். விமலா தனது கணவர் கல்யாணை அவரது காதலி நித்யஸ்ரீயை திருமணம் செய்து வைக்க தயாரானார். ஆனால் தானும் அவர்களுடன் இருக்க வேண்டும் என சத்தியம் வாங்கி கொண்டார். கல்யாண் முதல் திருமணத்திற்கு பின், இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது மூவரும் ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

திருமண ஏற்பாடுகள் அனைத்தையும் முதல் மனைவியே முன்னின்று கவனித்தது இங்கு சிறப்பு. விமலா கணவரின் இரண்டாவது திருமணத்தில் முக்கியப் பங்கு வகித்தார். கணவனையும் காதலியையும் கோவிலுக்கு அழைத்துச் சென்று திருமணம் செய்து வைத்தார். இருவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டார். தியாகமூர்த்தி விமலா சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். ஆனால் திருமணம் முடிந்து மூவரும் எங்கே போனார்கள் என்பது சஸ்பென்ஸ் ஆகிவிட்டது.