மாடுகளை களவாடிய நகரசபை உறுப்பினர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 2

புத்தளம்,செப்22

மாடுகளை திருடிய குற்றச்சாட்டு தொடர்பில் சந்தேகத்தின் பேரில் புத்தளம் நகர சபை உறுப்பினரொருவரும் , மேலும் நான்கு நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தளம், சிரம்பியடி மற்றும் ஆராய்ச்சிவில்லுவ ஆகிய கிராமங்களிலுள்ள இரு பெண்கள் செய்த முறைப்பாட்டை அடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த முதலாம் திகதி மற்றும் 6 ஆம் திகதிகளில் வீட்டுக்கு அருகில் கட்டப்பட்டிருந்த மாடுகளை ஒரு குழுவினர் திருடிச் சென்றதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

இதையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் நகர சபை உறுப்பினரின் சாரதி கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் .இதன் போது மாடுகளை திருடியது தொடர்பாக சகல விபரங்களும் தெரியவந்துள்ளது.

திருடிய மாடுகளை ஏற்றிச் செல்ல பயன்படுத்திவந்த வான் ஒன்றும் லொரி ஒன்றும் கைப்பற்றப்பட்டது. சந்தேக நபரான நகர சபை உறுப்பினர் புத்தளம் நகரத்தில் மாட்டிறைச்சி கடையொன்றை நடத்தி வருகிறார் என தெரியவந்துள்ளது.