சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ், செப்22

யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரண வாயில் புனரமைப்பு பணிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களமும் யாழ்ப்பாண மரபுரிமை மையமும் இணைந்து புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்துள்ளன. இதற்ககா 2.3 மில்லியன் ரூபாய் செலவு மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிதி பங்களிப்பினை யாழ்ப்பாண மரபுரிமை மையம் வழங்கவுள்ளது.

குறித்த தோரண வாயிலின் பாதுகாப்பு , புனர்நிர்மாணம் மற்றும் நில வடிவமைப்பு ஆகிய செயற்திட்டமே முன்னெடுக்கப்படவுள்ளது. சங்கிலியன் தோரண வாயில் அல்லது சங்கிலித்தோப்பு வளைவு என அழைக்கப்படுவது யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னனான சங்கிலியனின் மாளிகை அமைந்திருந்த இடம் எனக் கருதப்படுகின்றது. சங்கிலித்தோப்பு வளைவு யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில், நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்குச் சிறிது தூரத்தில் இது அமைந்துள்ளது.