ஜெர்சி தர்பூசணி பழம்போல் உள்ளது: பாக். முன்னாள் வீரர் கிண்டல்

செய்திகள் முக்கிய செய்திகள் 3 விளையாட்டு

கராச்சி, செப் 22

டி20 உலகக்கோப்பையில் விளையாட உள்ள உலக அணிகள் போட்டியில் தாங்கள் அணிய உள்ள புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துவருகின்றன. இந்த சூழலில் பாகிஸ்தான் அணியும் தங்களின் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் ஜெர்சி தொடர்பாக, சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் ஜெர்சியைப் பார்க்கும்போது பழக்கடையில் நிற்பதைப் போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், வழக்கமான அடர் பச்சை வண்ணத்தில் ஜெர்சியை வடிவமைத்து இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு முன்னாள் வீரரான கனேரியா கருத்து தெரிவித்து உள்ளார்.