சூரியவெவ பாடசாலை மாணவர்களுக்கு உணவளிக்க புதிய திட்டம்

செய்திகள் முக்கிய செய்திகள் 1

நமடகஸ்வெவ,செப் 23

நாட்டில் நிலவும் பொருளாதார வறுமையினால் பல சிறுவர்கள் உணவின்றி பாடசாலைக்கு வருவதாகத் தெரிவிக்கப்படும் செய்திகள் காரணமாக சூரியவெவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட நமடகஸ்வெவ மகா வித்தியாலயத்தில் பாடசாலை சிறுவர்களுக்கு உணவு வழங்கும் அற்புதமான நிகழ்ச்சித் திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது .

அதன்படி, உணவின்றி பாடசாலை க்கு வரும் குழந்தைகளுக்கு உணவு வழங்கும் நோக்கில், அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, பாடசாலையில் உணவு வங்கியை ஆரம்பித்துள்ளனர்.

இங்கு, தினமும் ஆசிரியர்கள், மேலதிகமாக ஒன்றிரண்டு உணவுப்பொதிகளை கொண்டு வந்து, பாடசாலையில் அமைக்கப்பட்டுள்ள உணவு வங்கியில் வைப்பதால், சாப்பிடாமல் வரும் குழந்தைகள், உணவு இருக்கும் இடத்துக்கு சென்று உணவுப் பொதிகளை பெற்றுக் கொள்கின்றனர்

எவ்வாறாயினும், பாடசாலையில் நிறுவப்பட்டுள்ள உணவு வங்கி தொடர்பில் அதிபரிடம் வினவியபோது அவர் ஊடகங்களுக்கு தகவல் வழங்க மறுத்துள்ளார்.
அதிபர் மற்றும் ஆசிரியர் குழுவினரால் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் மிகவும் பெறுமதியானது என கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.