கிளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,செப் 23

கிளைபோசேட் களைக்கொல்லி இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை தளர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, முழுமையான கண்காணிப்பின் கீழ் கிளைபோசேட் இறக்குமதி அனுமதிக்கப்படும்.

விவசாயிகளிடமிருந்து கிடைக்கப்பெற்ற பல முறைப்பாடுகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தேயிலை பயிர்ச்செய்கைக்கு மட்டுமே கிளைபோசேட் இறக்குமதிக்கு அரசு அனுமதி அளித்திருந்தது.