புரட்சி வெடிப்பதை தவிர்க்க முடியாது: சரத் பொன்சேகா

செய்திகள் முக்கிய செய்திகள் 1

கொழும்பு,செப் 23

ஊழல் அரசியல்வாதிகளை வாக்காளர்களால் வீட்டுக்கு அனுப்ப முடியாது போராட்டத்தால்தான் ஊழல் அரசியல்வாதிகளை வீட்டுக்கு அனுப்ப முடியும் என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஊழல் அரசியல்வாதிகளிடம் இருந்து நாட்டைக் காப்பாற்ற போராட்டம் வரவேண்டும் என்று கூறிய சரத் பொன்சேகா, எதிர்காலத்தில் முழு நாடும் போராட்டத்தில் ஈடுபட வேண்டும். ஊழல் அற்ற ஆட்சி வந்தால்தான் நாடு மீள முடியும்.

அரசியல்வாதிகள் அடி மட்டத்திற்கு சென்று மக்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ள வேண்டும் அல்லது கிளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது எனவும் தெரிவித்தார்.