யாழில் வெளிநாட்டு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 10 பேர் கைது

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ்ப்பாணம், செப் 23

யாழ்ப்பாணம் காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரை பகுதியில்  வெளிநாட்டு பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 10 பேர் ஊர்காவற்றுறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் அனைவரும் போதையில் இருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“காரைநகர் கசூரினா சுற்றுலா கடற்கரையில் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த ஸ்பெயின் நாட்டு பெண் சுற்றுலா வந்துள்ளார். அங்கு போதையில் நின்ற குழுவினர் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.

அதுதொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவம் இடத்துக்கு சென்ற பொலிஸார் போதையில் நின்ற 10 பேரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.