யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையானதாக கூறப்படும் 17 வயது சிறுமி: 8 மாத கர்ப்பிணி

செய்திகள் முக்கிய செய்திகள் 1

யாழ், செப்.24

யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையானதாக கூறப்படும் சிறுமி ஒருவர் 8 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொண்டபோது அவர் 8 மாத கர்ப்பமாகவுள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

அதேவேளை குறித்த சிறுமி போதைப்பொருளினை பெற்றுக்கொள்வதற்காக பாலியல் துர்நடத்தைகளில் ஈடுபட்டமையினால் தான் கர்ப்பம் தரித்தார் என தெரிய வருகிறது.