கொக்கேனுடன் ஒருவர் கைது

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக கொக்கேன் போதைப்பொருளை வயிற்றில் மறைத்த வண்ணம் சென்ற ஒருவரை இந்திய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபர் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வைத்து இன்று காலை கொழும்பிலிருந்து சென்ற விமானத்தில் பயணித்த நிலையில், கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சந்தேகத்திற்கிடமான முறையில் நகர்ந்து சென்றதை அடுத்து சுங்க அதிகாரிகள் அவரை சோதனையிட்ட நிலையில் போதைப்பொருள் கடத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.

பிந்திய செய்திகள்

சிறப்புச் செய்திகள்

சிறப்பு கட்டுரைகள்

இந்தியச் செய்திகள்

உலகச் செய்திகள்

விளையாட்டு