இன்று இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர்

சிறப்புச் செய்திகள் செய்திகள்

கொழும்பு, செப். 25: ஐக்கிய நாடுகள் முகவரமைப்புகளுக்கான அமெரிக்க தூதுவர் சின்டி மெக்கெய்ன் 3 நாள் விஜயமாக இன்று இலங்கை வருகிறார். வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் இருக்கும் அவர் பலதரப்பட்டவர்களையும் சந்திப்பார் என இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது, "இலங்கையில் அமெரிக்க அரசால் மேற்கொள்ளப்படும் உணவு உதவி திட்டங்களை முன்னிலைப்படுத்துவதற்காகவும், இலங்கையின் நலன்கள் தொடர்பில் அமெரிக்க கொண்டுள்ள உறுதிப்பாட்டை மீள் வலியுறுத்துவதற்காகவும் அவர் இலங்கை வருகிறார்.

இலங்கையிலுள்ள அரசாங்க அதிகாரிகள், உதவி நிறுவனங்களை சந்திக்கவுள்ள அவர், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங்குடன் இணைந்து மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் சமூக அமைப்புக்களுக்கு விஜயம் செய்யவுள்ளார்' என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.